Category Archives: செய்திகள்

கூகிள் மப்ஸ் மீது கட்டுப்பாடு – பென்டகன்

அமெரிக்க இராணுவத் தளங்களை கூகிள் ம்ப்ஸ் படமாக்குவதற்கு பென்டகன் தடை விதித்துள்ளது. இதுபற்றி கூகிள் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில் பென்டகன் குறிப்பிட்ட பிரதேசத்தின் படிமங்கள் தமது தரவுத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பென்டகன் கூகிள் குளப்பம் பற்றிய பிபிசி செய்தி

Advertisements

நகர்பேசி உலகிலும் தடம் ஊன்றும் மைக்ராசாப்ட்

நகர்பேசி உலகிலும் மைக்ரோசாப்ட் தனது தடத்தைப் பதிப்பதற்கு முயன்று வருகின்றது. இதன்படி அண்மையில் நொக்கியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி Silverlight எனும் தொழில் நுட்பத்தை நொக்கியா நகர்பேசிகளில் பயன்படுத்த உள்ளது.

Silverlight எனும் நுட்பம் அடோப் நிறுவனத்தின் Flash க்கு போட்டித் தயாரிப்பாகும். ஏற்கனவே இந்த Silverlight Platform தொழில்நுட்பத்தை யூடியூப் பாவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்டமாக நொக்கியாவின் சிம்பியன் இயங்குதளங்கள் உள்ள நகர்பேசிகளிலேயே இந்த தொழில்நுட்பம் பாவிக்கப்பட உள்ளது. நொக்கியாவின் S60, எனும் platformமே Silverlight தொழில்நுட்பத்தைத் தாங்கும் முதலாவது சிம்பியன் இயங்குதளம் உள்ள நகர்பேசியாகப் போகின்றது.  இந்த S60 முறை N96 பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Silvrlight மூலம் இணையம் சார் செயலிகளை உருவாக்க முடியும். இந்த செயலிகள் இணைய உலாவியின் உதவியின்றி செயற்படக் கூடியன.

Adope ஐ மைக்ரோசாப்ட் வெல்லுமா அல்லது புஷ் என மறைந்து போய்விடுகின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Yahoo BUZZ அறிமுகம்

null

யாகூ BUZZ என்ற சேவையை யாகூ அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் மூலம் இணையத்தில் சூடாக உள்ள செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

இங்கு காட்டப்படும் முடிவுகள் இணையத் தேடல்கள், பயனர்களின் வாக்கு என்பவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றதாம்.

இரத்தினச்சுருக்கத்தில் Yahoo Buzz பற்றிக் கூறுவதானால்….

Yahoo! Buzz features the most popular stories right now, determined by people around the Web. A story’s Buzz Score is based on your votes, searches, emails, and more.

Stories with the highest Buzz Score may be displayed on the Yahoo! homepage

உடல் வெப்பத்தில் செயல்படும் MOBILE

உடல் வெப்பத்தில் தொழிற்படும் செல்பேசியைக் கண்டுபிடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என ஜேர்மானிய ஆராச்சியார்கள் கூறியுள்ளனர். இதே தொழில்நுட்பத்தில் மேலும் பல புதிய முயற்சிகளை செய்ய உள்ளனர். அதாவது உயிர்காக்கும் கருவிகளைக்கூட மனித உடல் வெப்பதில் தொழிற்பட வைக்க முயல்கின்றனர்.

The scientists have set their eyes on a wide range of possible applications: ‘Electricity can be generated from heat any place where a temperature difference occurs,’ claims Spies

மேலும்

ஹிந்தி போல தமிழுக்கும் transliteration சேவை கூகிளால் அறிமுகம்


இது வரைகாலமும் ஹிந்தி மொழிக்கு மட்டுமே இந்த சேவை கூகிளினால் வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இப்போது தமிழ் உட்பட மேலும் சில மொழிகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. 😀

எதிர்காலத்தில் ஓர்குட், ஜிமெயில், பிளாக்கர் போன்ற சேவைகளில் இது உள்ளடக்கப்பட்டால் இ-கலப்பை இல்லாமல் தட்டச்சு செய்யலாம். ஆனால் இது பொனட்டிக் முறையே!!!

Tamil : http://www.google.com/transliterate/indic/Tamil
Telugu : http://www.google.com/transliterate/indic/Telugu
Kannada : http://www.google.com/transliterate/indic/Kannada
Malayalam : http://www.google.com/transliterate/indic/Malayalam

இது இயங்க நீங்கள் இணையத்துடன் இணைந்திருக்க வேண்டும். அத்துடன் சில தட்டச்சு உதவிகளையும் இது செய்கின்றது. தமிழிற்கு என்னுமொரு படிக்கட்டாக இது அமையட்டும்.

மேலும் அறிய

அன்புடன்,
மயூரேசன் 😉

ஆர்கூட் தமிழில்

இன்று ரவியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ஆர்கூட்டுக்கு தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி இருந்தது…!!!

ஜிமெயிலுக்கே இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாத நிலையில் எவ்வாறு ஆர்கூட்டுக்கு வழங்கினார்கள் என்று சென்று பார்த்தேன்… அட சத்தியமாத்தாங்க.. தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளது!!!!

Settings -> Display Lanugauge: தமிழ் என்பதைத் தெரிவு செய்தால் சரி. தமிழ் இடைமுகம் கிடைத்துவிடும்.

மொழிபெயர்பில் சில குறைகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆயினும் கூகுளுக்கு இந்தளவில் மனம் வந்ததே பெரிய விடயம்.

இது பற்றிய மேலதிக உரையாடல்களை கூகளின் இந்திய மொழிகளுக்கான குழுமத்தில் உரையாடலாம்!!!

திரைக்காட்சியைக் காண்க

ஜூன் 15 ல் ஐபோன் (iPhone) வெளிவருகின்றது.

உலகை ஈர்த்த iPhoneஅதிகமாக எதிர்பார்க்கப்ட்ட ஐபோன் வெளியாகும் திகதி கலிபோர்ணியாவில் அமைந்துள்ள நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் விலை $499 (£251) முதல் $599 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மொபைல் ஃபோனும் PDA யும் சேர்ந்த அமைப்பாகும். இந்த கருவி முழுக்க முழுக்க தொடுகையை உணர்ந்து செயற்படக்கூடியதாகும்.

விளம்பரத்திலே வீடியோ பார்த்தல், இணையத்தை துளாவுதல், விரல்களை சுட்டியாகப் பயன்படுத்தி மின்னஞ்சல் பார்த்தல் என்பன காட்டப்பட்டது. அப்பிள் கம்பனி இதன் மூலம் தொலைபேசி சந்தையிலும் தடம்பதிக்கப் போகின்றது.

iTunes music & Video களஞ்சியத்துடன் செயற்படக்கூடியதாக இருப்பதால் இன்னமும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பா, மற்றும் உலகின் மற்றய பகுதிகளுக்கான வெளியீட்டுத் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை!!!