4 : தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில்

தற்போது தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில் வந்துள்ளது.ஆரம்ப நிலை என்பதால் என்னவோ கடுமையாக சொற்களைப் போட்டுக் குளப்பிக் கொள்கின்றது. அன்புள்ள என்ன வார்த்தையையே பிழை என்று காட்டுகின்றது என்றால் பாருங்களேன்.

இது வெறும் ஆரம்பம் தானே. பார்ப்போம் எந்தளவிற்கு நம்ம கூகள் ஆண்டவர் தமிழுக்கு இடம் வழங்குகின்றார். ஏற்கனவே ஜிமெயில் தமிழாக்கம் நடைபெற்று வந்தாலும் அதில தர நிர்ணயம் இல்லாமல் ஒவ்வொருத்தரும் தம்பாட்டுக்கு தமிழாக்கம் செய்வதாக அறிகின்றேன். இந்நிலை விரைவில் நீங்க வேண்டும்.

ஜிமெயிலுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே ஹிந்தி இடைமுகம் வழங்கப்பட்ட போதும் இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாமை வருத்தத்திற்குரிய விடையமே!

அன்புடன்,
மயூரேசன்.

Advertisements

5 responses to “4 : தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில்

 1. மயூரேசன், துறை சார் பதிவுகள் பெருக்கும் முயற்சியில அடுத்து நீங்களும் குதிச்சாச்சா? இப்படி துறை பிரிச்சு எழுதுறது நம்ம பதிவுக்கு வரவு கூட்டும், படிக்கிறவங்களுக்கும் வசதி, ந்மக்கும் ஒதுங்க வைச்ச மாதிரி இருக்கும். ஆமா, இந்த தமிழ்த் திருத்தி betaவில் இருக்கிறதா? என் check spelling தெரிவுகளில் தமிழை காணோம்? இந்தி மட்டும் தான் இருக்கிறது

 2. ஆமாம் நானும் குதிச்சாச்சு… நீண்டநாள் ஆசை கடைசியாய் செயலில் வந்திட்டுது. மற்றது நீங்கள் கேட்ட சொற்பிழை திருத்தும் வசதி பீட்டாவில் உண்டு. தமிழில் தட்டச்சு செய்துவிட்டு செக் ஸ்பெல்லிங் என்பதை சொடுக்குங்கள்.. அது தானாகவே பரீட்சிக்கும்.

 3. இந்தப் பதிவும் சிறக்க வாழ்த்துக்கள் மயூரன்..
  கணிணி என்பதா கணனி என்பதா computer ற்குரிய சரியான தமிழ்பதம்?
  நான் கணனி என்பதை calculator ற்கு பயன்படுத்துவதாக அறிந்துள்ளேன்..
  வடிவாத்தெரியாது, ஒருக்கா sure பண்ணிக்கொள்ளுங்கோவன்..
  படியாதவன்

 4. how can get tamil gmail account i mean he address?

 5. ம்.. தமிழில் இடைமுகம் பற்றிக் கேட்கி்ன்றீர்களா?? அது இன்னமும் வழங்கப்படவில்லை. அதுபோல தமிழில் மின்னஞ்சல் முகவரி பெற முடியாது.. ஆங்கிலத்திலேயே பெற முடியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s