தமிழ் யுனிக்கோடை உயிர்ப்பிக்க

தற்போது கணணியில் ஆங்கிலத்தில் செய்யும் வேலைகள் அனைத்தையும் கிட்டத்தட்ட தமிழிலும் செய்ய முடியும். இதற்கு முதலில் உங்கள் கணணியில் யுனிகோட் வசதியை உயிர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பல.
1. உங்கள் மொசிலா உலாவியில் தமிழ் ஒழுங்காகக் காட்சி தரும்
2. கோப்புகளிற்கு தமிழில் பெயரிடலாம் (குறிப்பாக தமிழ் பாடல்களிற்கு) .
3. இன்டாநெட் எக்ஸ்புளோரர் டைட்டல் பாரில் தமிழ் தலைப்புகள் தெரியும் (இல்லாவிட்டால் சில பெட்டிகளே தெரியும்)

இதைப்போல பல எண்ணிலடங்கா வசதிகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.முதலில் Start -> Control Panel -> Regional and Language Option என்ற தெரிவை இரட்டைக் கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் Languages எனும் டப்பை கிளிக் செய்யவும் பின்பு Install files for complex script and right-to-left languages எனும் செக் பாக்சை செக் செய்யவும். இப்போது ஓகே பட்டனை கிளிக் செய்யவும் உங்களிடம் வின்டோஸ் எக்ஸ் பி குறு வட்டு கேட்கப்படும்

அதையுள்ளிட்டால் தானாக நிறுவல் முடிவடையும். அதன் பின்னர் ஒரு தடவை கணணியை மூடிப் பின்னர் திறவுங்கள் (ரீபூட் செய்யுங்கள்).
இப்போது உங்கள் கணணி யுனிக்கோட்டின் உச்சப் பயன்பாட்டைப் பெறத்தயாராகி விட்டது. உங்கள் கணணியை ஒரு தடவை பரீட்சித்துப் பார்ப்பதற்கு நீங்கள் பின்வரும் வெப்தளங்களுக்கு ஒரு தடவை சென்று பாருங்கள்.

1. http://www.bbctamil.com
2. http://ta.wikipedia.org
3. http://www.bbc.co.uk/hindi (இது இந்தி வெப்தளம்)

இனி அடுத்த பதிவில் எவ்வாறு யுனிகோட் தமிழில் உள்ளிடுவது (Input) எனப் பார்ப்போம். இந்த முறை மூலம் நீங்களும் உங்கள் வலைப் பதிவுகளில் தமிழில் உள்ளிடலாம்.

Advertisements

7 responses to “தமிழ் யுனிக்கோடை உயிர்ப்பிக்க

 1. மயூரா!
  மிக்க நன்றி! நான் இவற்றை முயல்கிறேன்.சில விடயங்கள் கணணியில் பிடிபடுவதே இல்லை.
  யோகன் பாரிஸ்

 2. மயூரா!
  மிக்க நன்றி! நான் இவற்றை முயல்கிறேன்.சில விடயங்கள் கணணியில் பிடிபடுவதே இல்லை.
  யோகன் பாரிஸ்

 3. nice to see topics like this in tamil blogging! i too want to pioneer the neo tamil blogging movement with usefull stuff than some pranks!

  one glitch. your pages are not showing properly in my FIREFOX due to css paragraph option “justify”. kindly do the needful. visit me sometime.

 4. SP.VR.சுப்பையா

  திரு.மயூரன் அவர்களுக்கு,
  உங்கள் பதிவுகள் எல்லாமே சிறப்பாக உள்ளன!
  கணினி பற்றி விடாது இன்னும் நிறைய எழுதுங்கள்!
  வாழ்த்துக்கள்
  கடவுள் உங்களுக்குத் துணை வருவார்!

 5. மயூரேசன் Mayooresan

  பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. நாலுபேர் பயன்பட வேண்டும் என்ற நோக்கிலேயே இதை எழுதினேன். நீங்கள் பயன் பெறுகின்றீர்கள் என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

 6. அன்பு ரசிகன்.

  நல்லதொரு பதிவு. வாழ்த்துக்களும் நன்றிகளும் மயூவிற்கு.

 7. நன்றி அன்பு இரசிகரே!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s