பரிட்சித்து பார்க்கும் நோக்குடன் வேர்ட்பிரஸ் 2.5 வெளியடப்பட்டுள்ளது.
வேர்ட்பிரஸ் 2.5 இடைமுகத்தைக் காண விருப்பமா? அப்படியானால் இந்த வீடியோவைப் பாருங்கள்!
பரிட்சித்து பார்க்கும் நோக்குடன் வேர்ட்பிரஸ் 2.5 வெளியடப்பட்டுள்ளது.
வேர்ட்பிரஸ் 2.5 இடைமுகத்தைக் காண விருப்பமா? அப்படியானால் இந்த வீடியோவைப் பாருங்கள்!
பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · வலைப்பதிவு · வீடியோ பதிவு · வேர்ட்பிரஸ்
குறிச்சொற்கள்: WordPress
வேர்ட்பிரஸ் 2.5 விரைவில் வெளியாக உள்ளது நீங்கள் அறிந்ததே. இதன் இடைமுகம், செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்று அறிய ஆவலாக உள்ளீர்களா? அப்படியானால் வேர்ட்பிரஸ் 2.5 Demo தளத்திற்குச் சென்று பின்வரும் தரவுகளைப் பயன்படுத்தி புகுபதிலை செய்யுங்கள்
பயனர்பெயர்: admin
கடவுச்சொல்: demo
பகுப்புகள்: வேர்ட்பிரஸ்
குறிச்சொற்கள்: தமிழ், வேர்ட்பிரஸ், Tamil, WordPress 2.5, WordPress demo
பிரபலமான இணையம் சார் விற்பனையாளரான ebay தனது வலைப்பதிவிற்கு வேர்ட்பிரஸ் பாவிக்கத் தொடங்கியுள்ளது. வேர்பிரஸ் இரசிகர்களான நமக்கு இது நல்ல சேதிதானே???
பகுப்புகள்: இணையம் · செய்திகள் · துணுக்குகள் · வேர்ட்பிரஸ்
குறிச்சொற்கள்: வேர்ட்பிரஸ், ebay
தமிழ் கூறும் நல்லுலகம் இறுதியாக ஒன்றிணைந்து ஒரு நல்ல நிகழ்வினை நடத்தி முடித்துள்ளது. தமிழில் வேர்ட்பிரஸ் இடைமுகம் வழங்கப்பட்டுவிட்டது.
அங்கங்கே பிழைகள், ஒரு சொல்லுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டமை போன்ற பிரைச்சனைகள் உள்ளன. ஆயினும் எமது கூட்டுமுயற்சியின் வீரியத்தின் முன்னால் இவையனைத்தும் எதுவமேயல்ல.
அடுத்த பதிப்பில் இந்தக் குறைகளையும் களைய வேண்டும். எத்தனையே தடவை முக்கி முக்கி வேண்டியபோதும் பிளாக்கருக்கு தமிழ் இடைமுகம் வழங்காமல் பிகுபண்ணும் கூகுகிள் இதைப் பார்த்தாவது இடைமுகம் வழங்கட்டும்.
http://ta.wordpress.com என்ற முகவரிக்குச் சென்று தமிழ் வேர்ட்பிரசைக் காணுங்கள்!!!
இத்திட்டத்தை முன்னின்று நடத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.
வாழ்க தமிழ்! வாழிய தமிழ் கணனியியல்!!!
பகுப்புகள்: கணனி · பிளாக்கர் · வலைப்பதிவு · வேர்ட்பிரஸ்
நீங்கள் தனியாக ஒரு முகவரியில் வேர்ட்பிரசை நிறுவிப் பயன்படுத்துபவரானால் ஒவ்வொரு தடவை தீமை மாற்றும் போதும் நீங்கள் அங்கு கருவிப்பட்டைக்காக மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
இதற்காக ஒரு நீட்சி இருந்தால் எப்படி இருக்கும். அதாவது நீட்சியை நீங்கள் நிறுவிவிடுங்கள் பின்னர் உங்கள் இஷ்டத்திற்கு தீம்களை மாற்றுங்கள். ஒவ்வொரு தடவை தீமை மாற்றும் போதும் நீங்கள் அதற்காக மாற்றங்களை செய்யத் தேவையில்லை. நீட்சியே எல்லா வேலையையும் செய்துவிடும்.
நிசத்தில் இப்படி ஒரு நீட்சியை ஒரு தமிழ் அன்பர் எழுதியுள்ளார். சென்று பெற்றுப் பயனடையுங்கள். நான் இப்போ அந்த நீட்சியைத்தான் பயன்படுத்துகின்றேன்…!!!
அன்புடன்,
மயூரேசன்.
பகுப்புகள்: வேர்ட்பிரஸ்