தமிழில் நுட்பம்

‘பிளாக்கர்’ பகுப்பில் உள்ள வரவுகள்

பிளாக்கர் வீடியோ உதவித்தளம்

மார்ச் 14, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

பிளாக்கர் உதவி வீடியோவாக

பிளாக்கர் தன் உதவிகளை இப்போது வீடியோவாக வெளியிட்டுள்ளது. யூடியூப்பில் பிளாக்கர் உதவிகள் இப்போது கிடைக்கின்றன.

ஆரம்பத்திற்கு இப்போ சில வீடியோக்கள் மட்டுமே உள்ளிட்டுள்ளார்கள். விரைவில் மேலும் பல பதிவுகளை இட உள்ளார்கள்!!!

பக்கங்களை வாசிக்க உங்களுக்கு அலுப்பா? அப்ப வீடியோ பாருங்க!!! :)

பகுப்புகள்: உதவித் துளி · கணனி · கூகுள் · பிளாக்கர்
குறிச்சொற்கள்: , , , , ,

பிளாக்கரில் தமிழில் உள்ளிடலாம்

பெப்ரவரி 19, 2008 · 2 மறுமொழிகள்

இந்தப் பதிவை வாசித்து, தமிழில் நேரடியாக எவ்வாறு உள்ளிடலாம் என்று அறியுங்கள்.

 இதைப் பயன் படுத்துவதால் என்ன தீமை என்று விளக்குகின்றார் ரவி.

பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · கணனி · கூகுள் · தமிழும் கணிப்பொறிய · பிளாக்கர்
குறிச்சொற்கள்: , , , ,

தமிழ் வேர்ட்பிரஸ் வந்தார்

டிசம்பர் 12, 2007 · 6 மறுமொழிகள்

தமிழ் கூறும் நல்லுலகம் இறுதியாக ஒன்றிணைந்து ஒரு நல்ல நிகழ்வினை நடத்தி முடித்துள்ளது. தமிழில் வேர்ட்பிரஸ் இடைமுகம் வழங்கப்பட்டுவிட்டது.

அங்கங்கே பிழைகள், ஒரு சொல்லுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டமை போன்ற பிரைச்சனைகள் உள்ளன. ஆயினும் எமது கூட்டுமுயற்சியின் வீரியத்தின் முன்னால் இவையனைத்தும் எதுவமேயல்ல.

 அடுத்த பதிப்பில் இந்தக் குறைகளையும் களைய வேண்டும். எத்தனையே தடவை முக்கி முக்கி வேண்டியபோதும் பிளாக்கருக்கு தமிழ் இடைமுகம் வழங்காமல் பிகுபண்ணும் கூகுகிள் இதைப் பார்த்தாவது இடைமுகம் வழங்கட்டும்.

http://ta.wordpress.com என்ற முகவரிக்குச் சென்று தமிழ் வேர்ட்பிரசைக் காணுங்கள்!!!

 இத்திட்டத்தை முன்னின்று நடத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.

வாழ்க தமிழ்! வாழிய தமிழ் கணனியியல்!!!

பகுப்புகள்: கணனி · பிளாக்கர் · வலைப்பதிவு · வேர்ட்பிரஸ்

55 : புதிய பிளாக்கர் ஒரு சுகானுபம்

ஜனவரி 13, 2007 · 7 மறுமொழிகள்

எனது முன்னய ஒரு பதிவில் பிளாக்கர் பீட்டாவினால் என் வலைப்பதிவை இழந்ததையும் புதிய பிளாக்கர் கணக்கை ஆரம்பித்ததைதப் பற்றியும் எழுதினேன்.

இன்று காலை நான் மீண்டும் பழைய பிளாக்கரில் இருந்து புதிய பிளாக்கருக்கு மாறினேன். பிரைச்சனை இல்லாமல் புதிய பிளாக்கருக்கு மாறியது. இதற்கு சுமார் மூன்று நிமிடங்கள் வரையே எடுத்தது.

முன்னெச்சரிக்கையாக நான் என் டெம்பிளேட்டை ஒரு கொப்பி எடுத்து வைத்திருந்தேன் ஆகவே புதிய பிளாக்கருக்கு மாறிய பின்னர் அதை மீளப் போட்டுக்கொண்டேன். ஏனெனில் இவ்வாறு மாறும் போது டெம்பிளேட்டில் இருந்த தமிழ் எழுத்துக்கள் மற்றவர்கள் கூறியது போல பூச்சி பூச்சி போல மாறிவிட்டிருந்தது.

நான் என் பாக்கப் கொப்பி டெம்பிளேடைப் போட்டு தமிழ் மணத்தில் ஒரு பதிவை ஏற்றிப் பார்த்தேன் அது பிரைச்சினை இல்லாமல் ஏறியது அத்துடன் பின்னூட்டமும் சேகரிக்கப்பட்டது.

பின்னர் புதிய டெம்பிளேட்டைப் போட்டு தமிழ் மணத்தில் கூறியவாறு புதிய கருவிப்பலகையையும் சேர்த்தேன் பிரைச்சினை இல்லாமல் சேர்ந்து கொண்டது. அப்புறம் புதிய டெம்பிளேட் சரியாக வேலை செய்கின்றதா என்று பார்க்க மீண்டும் தமிழ் மணத்திற்கு ஒரு பதிவை ஏற்றிப் பார்த்தேன். ஆகா என்ன ஒரு சந்தோஷ நிகழ்வு மீண்டும் தமிழ்மணம் பிரைச்சனை இல்லாமல் பதிவை ஏற்றுக்கொண்டது.

புதிய பிளாக்கரில் டெம்பிளேட்டை எடிட் செய்வது முன்பு போல கஷ்டமல்ல! எமக்குத் தேவையான பெட்டிகளை மிக இலகுவாகப் போட்டுக்கொள்ளலாம்!

இப்பத்தானே ஆரம்பம் போகப் போக என் சுகானுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

நன்றி

அன்புடன்,
ஜெ.மயூரேசன்

பகுப்புகள்: பிளாக்கர்

54 : புதிய பிளாக்கர் அட்டைப்பலகையுடன்

ஜனவரி 13, 2007 · 3 மறுமொழிகள்

புதிய பிளாக்கர் அட்டைப்பலகையை மாற்றிவிட்டேன். தமிழ் மணம் ஏற்றுக்கொள்கின்றதா என இந்தப் பதிவின் மூலம் பரீட்சிக்கின்றேன்…

தமிழ் மண வாசிகள் பின்னூட்டமிட்டு அண்மையில் பின்னூட்டப்பட்டவை பகுதியில் தெரிகின்றதா எனப் பார்க்க உதவிபுரியவும்.

அன்புடன்,
மயூரேசன்

பகுப்புகள்: பிளாக்கர்

53 : புதிய பிளாக்கர்

ஜனவரி 13, 2007 · 2 மறுமொழிகள்

புதிய பிளாக்கருக்கு மாறியதைத் தொடர்ந்து அதைத் சோதிக்கவே இந்தப் பதிவு பதிக்கப்படுகின்றது!!

பகுப்புகள்: பிளாக்கர்

பிளாக்கர் பீட்டா (BETA) ஒரு துன்பியல் நிகழ்வு

செப்டம்பர் 14, 2006 · 26 மறுமொழிகள்

கையைச் சுட்ட பிளாக்கர் பீட்டாவும் கைவிரித்த பிளாக்கர் உதவிக்குழுவும்

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல நன்றாக வேலை செய்து கொண்டு இருந்த எனது பிளாக்கரில் தேவையில்லாமல் சில மாற்றங்கள் செய்யப்போய் இறுதியில் கையைச் சுட்டுக்கொண்டதுதான் மிச்சம்.

ஒரு நாள் வேலை செய்து கொண்டு இருக்கும் போது தேவையில்லாமல் பிளாக்கர் பீட்டாவிற்கு எனது பிளாக்கரை மாற்றினேன். அவ்வளவுதான் எனது பளாக்கர் கெட்டு குட்டிச்சுவரானது.

எழுத்துகளெல்லாம் ஏதோ நண்டுக்கால்கள் போல தெரிய ஆரம்பித்தன. மறுமொழி இட்டவர்களின் பெயர்கள் எல்லாம் ஏதோ போலத் தெரிந்தன. நானும் என்னால் முடிந்த பரிசோதனைகளை செய்து இருந்ததையும் கெடுத்ததுதான் மிச்சம். தமிழ் மணத்தின் கருவிப்பட்டை முதலானவையும் செயல் இழந்தது. தேன் கூடு மட்டும் வேலை செய்தது. கடைசியாக புதிய வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டியதாகிவிட்டது.

இதன் போது பிளாக்கர் உதவிக் குழுவிற்கு நான் உதவி கேட்டு அனுப்பிய கடிதமும் அவர்கள் அனுப்பிய பதிலும் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள். யாருக்காவது உதவி செய்ய விருப்பமென்றால் அவர்களிடம் சொல்லுங்கள் பிளாக்கர் பீட்டாவிற்கு மாற வேண்டாம் என்று. கையைச் சுட்டவர்கள் பட்டியல் மோசமாக நீள்கின்றது. இனியும் தமிழ் வலைப்பதிவர்கள் தமது வலைப்பதிவை இழக்காமல் இருக்க இந்தத் தகவலைப் பரப்புவோம்.

அன்புடன்,
மயூரேசன்

Hi there,

Thanks for writing in. I’m afraid that once you migrate your account to
Blogger in beta, you can’t switch back to your old Blogger account. We
apologize for any inconvenience and we hope you enjoy our new features.
Additionally, please rest assured that we are working hard to polish
Blogger in beta and fix every bug that arises as soon as possible.

Thank you for your continued patience with these issues.

Sincerely,
Danish
The Blogger Team

Original Message Follows:
————————
From: Jeyakumaran Mayooresan
Subject: requst to roll back from beta
Date: Sat, 2 Sep 2006 05:52:24 -0700 (PDT)

Hi there,
I have moved to blogger beta. But it’s not supporting Tamil scripts as
the previous versions. It makes me loose my viewers. Please help me to roll
back from blogger beta. I can’t work with beta anymore. Please help me.
http://blogmayu.blogspot.com
Thanking you
J.Mayooresan
Management and Information Tech.
Faculty of Science
University of Kelaniya
Sri lanka.

பகுப்புகள்: பிளாக்கர் · வலைப்பதிவு

டெம்பிளேட் உதவி – தமிழ் மணம் கருவிப் பட்டை போட

செப்டம்பர் 8, 2006 · 1 மறுமொழி

நான் எனது வலைப்பதிவிற்கு மூன்றாம் தரப்பு டெம்பிளேட் ஒன்றைப்பாவிக்கின்றேன். எனக்கு இதில் தமிழ் மண கருவிப் பலகயை உள்ளிட முடியாமல் உள்ளது.

யாராவது உதவி செய்வீர்களா???

எனக்கு ஒரு உதவி தேவையென்றால் வேற யாரிடம் உதவி கேட்பேன்

டெம்பிளேட் காப்பி ஒன்றைப்பெற

தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள். இந்த டெம்பிளேட்டை போதுமான வரை தமிழாக்கம் செய்துள்ளேன். ஆகவே வேறு யாரும் தேவையென்றாலும் பயன்படுத்தலாம்.

அன்புடன்
மயூரேசன்

பகுப்புகள்: இணையம் · உதவித் துளி · கணனி · பிளாக்கர்

கையைச் சுட்ட பிளாக்கர் பீட்டா!

செப்டம்பர் 5, 2006 · 5 மறுமொழிகள்

புதிய வலைப்பதிவு ஆரம்பிக்க காரணம் பிளாக்கர் பீட்டா செய்த குளறு படிகளே. என்னுடன் நன்கு உழைத்துக்கொண்டு இருந்த பிளாக்கரை ஒரு நாள் நான் தேவையில்லாமல் பீட்டா பிளாக்காராக மாற்றினேன். அன்றுதான் என் பிளாக்கரை சனி பிடித்துக்கொண்டது. இன்று கடும் தொழில் நுட்பச்சிக்கல்களால் அந்த வலைப்பதிவைக் கைவிட்டு புதிய வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன். பழைய வலைப்பதிவில் இருக்கும் கட்டுரைகளை இங்கு மெல்ல மெல்ல மாற்றிய பின அந்த வலைப்பதிவை அழிக்கும நோக்கம் உள்ளது. ஆகவே மயூரெசனின் புதிய வலைப்பதிவு http://tamizhblog.blogspot.com

பிளாக்கரும் சரி தமிழ் மணமும் சரி எனக்கு உதவி செய்யத் தவறி விட்டன. கடிதம் மேல் கடிதம் அனுப்பியும் எந்தப்பயனும் இல்லை. ஆகவே என்னுடைய பழைய வலைப்பதிவு http://blogmayu.blogspot.com மரணித்து விட்டதாகக் கொள்ளவும்

பகுப்புகள்: பிளாக்கர்