தமிழில் நுட்பம்

‘பகுக்கப்படாதது’ பகுப்பில் உள்ள வரவுகள்

Google Docs தமிழில்

மார்ச் 27, 2008 · 2 மறுமொழிகள்

கூகிள் டொக்ஸ் இப்போது தமிழ் இடைமுகத்துடன் பெறலாம். இது பற்றிய பதிவை தமிழ் வலைப்பதிவில் காண்க!

பகுப்புகள்: பகுக்கப்படாதது
குறிச்சொற்கள்: , , , , , ,

Safari 3.1 வெளியானது

மார்ச் 20, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

அப்பிள் கம்பனி தனது சபாரி உலாவியின் பிந்திய பதிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி இந்த உலாவிதான் உலகில் வேகமான உலாவியாம்!!!

null

உலாவியை பதிவிறக்குக

பகுப்புகள்: பகுக்கப்படாதது

Youtube API அறிமுகம்

மார்ச் 12, 2008 · 2 மறுமொழிகள்

எங்கிருந்தும் வீடியோவை பதிவேற்றி அதை மற்றய இணையத் தளங்கள், நகர்பேசகள் போன்றவற்றில் பார்க்கூடியதாக இருந்த youtube இப்போது தம்மை பயனர்களை நோக்கி மேலும் திறந்து விட்டுள்ளதாக உள்ளது. இதற்காக API வெளியிட்டுள்ளது.

நீங்கள் மென்பொருள் வடிவமைப்பாளராக இருந்தால் கூகிள் கோட் சென்று இந்த புதிய முயற்சியை முயற்சித்துப் பார்க்கலாம்.

இதன் மூலம் நீங்கள் செய்யக் கூடிய செயல்கள்

  • Upload videos and video responses to YouTube
  • Add/Edit user and video metadata (titles, descriptions, ratings, comments, favorites, contacts, etc)
  • Fetch localized standard feeds (most viewed, top rated, etc.) for 18 international locales
  • Perform custom queries optimized for 18 international locales
  • Customize player UI and control video playback (pause, play, stop, etc.) through software

பகுப்புகள்: பகுக்கப்படாதது

வேர்ட்பிரசில் அர்த்தமுள்ள முகவரி

மார்ச் 4, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

வேர்ட்பிரசில் அர்த்தமுள்ள முகவரி உருவாக்குவது எவ்வவாறு என்பதை தமிழ் வலைப்பதிவில் காணுங்கள்.

பகுப்புகள்: பகுக்கப்படாதது
குறிச்சொற்கள்: , , ,

10 : குறைந்த விலையில் அகலப்பட்டை இணைப்பு

மார்ச் 7, 2007 · 4 மறுமொழிகள்

இந்தத் தகவல் இலங்கை அன்பர்களுக்காக. இந்திய அன்பர்கள் தவறி வந்திருந்தால் சும்மா வந்ததற்காகத் தகவலை வாசித்துவிட்டாவது செல்லுங்களேன்.

தற்போது அகலப்பட்டை இணைப்பு 1000 ரூபா என்ற குறைந்தவிலையில் இருந்து வழங்கப்படுகின்றது. ஸ்ரீ லங்கா டெலிக்கொம் இந்த சேவையை அளிக்கின்றது. முன்பு ஆகக்குறைந்த விலை 2500 ரூபாவாக இருந்தது. 2500 ரூபாவுடன் வாட் வரி சேர்ப்பதன் மூலம் சுமார் 2800 ரூபா வரை மாதா மாதம் செலுத்த வேண்டி இருந்தது. இது சாதாரண நடுத்தரக் குடும்பத்தாருக்குச் கொஞ்சம் அதிகமான பணமே! 2500 ரூபா பணத்திற்கு 512 Kbps வேகமுள்ள இணைப்பை வழங்கினர்.

ஆயினும் தற்போது வழங்கப்படுகின்ற 1000 ரூபா பெறுமதியான இணைப்பு மூலம் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களும் அகலப்பட்டை இணைப்பைப் பெறுவது சாத்தியமாகி உள்ளது. அத்துடன் வேகமும் 512 Kbps ஆகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி நீங்கள் நினைத்தால் அது முட்டாள் தனம். ஏனெனில் இந்த 1000 ரூபா 1 GB வரை பதிவிறக்க, பதிவேற்ற மட்டும்தானாம். அதற்கு மேல் பதிவிறக்கும் ஒவ்வொரு 250 MB க்கும் 250 ரூபாய் கட்ட வேண்டுமாம். எப்படிப்பார்த்தாலும் 2500 ரூபா பெறுமதியான இணைப்பே லாபமானது. ஆயினும் ஒரு தனிநபர் பதிவிறக்கம், பதிவேற்றங்களில் (குறிப்பாக வீடியோ கோப்புகள், திரைப்படங்கள்) அவ்வளவு ஈடுபடாதவர் என்றால் இந்த இணைப்பு பயன்தரலாம்.

இதில் உள்ள மற்றொரு பிரைச்சனை என்னவென்றால் இன்னமும் இலங்கையின் தமிழ் பிரதேசங்களான வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு இந்த அகலப்பட்டை சேவை வழங்கப்பட வில்லை. தனியே கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளிலே வழங்கப்பட்டுள்ளது. விரிவாக்கல் செலவு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து. ஒளியிழைகளைக்கான அதிகமான செலவே இதற்கு முக்கியமான காரணமாக இருக்க வேண்டும். கொழும்பின் புற நகர்ப்பகுதிகளுக்கே அண்மையில்தான் விரிவாக்கினார்கள்.

சுவர் இருந்தால் தானே சித்திரம் !!! கணனியே இல்லாமல் எத்தனையோ குடும்பங்கள் இருக்கும் போது இந்த விலை குறைப்பினால் என்ன லாபம் என்று கேட்பது என் காதல் கேட்கின்றது!!!

பகுப்புகள்: பகுக்கப்படாதது

தொடர்பாடல் ஒரு அறிமுகம்! (Communication)

செப்டம்பர் 5, 2006 · 1 மறுமொழி

மனிதன் ஒரு தொடர்பாடும் விலங்கு எனக் கூறலாம். மனிதர்கள் எப்போதும் குழுக்களாக வாழவே விரும்புகின்றான். தனியாக வாழ எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது அங்கத்தவர்களிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்பட்டதன் காரணமாகவே தொடர்பாடல் முறைகள் உதயமானது.
தொடர்பாடல் முறைகளானது மனித வர்கத்தின் அளவுக்கு பழைமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் பின்வரும் முறைகள் மூலம் தொடர்பாடலை மேற்கொண்டான்.• மேளங்கள்• நெருப்பு• அங்க அசைவுகள்
பின்னய காலங்களில் மெல்ல மெல்ல மொழிகள் விரிவாகத் தொடங்கியது. முதலில் பேச்சு வடிவம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தபோதும் பின்னர் மெல்ல மெல்ல எழுத்து வடிவமும் காலத்தின் தேவையுடன் உருவாக்கப்பட்டது.
இன்று நாம் என்றுமே இல்லாத அளவுக்கு தொடர்பாடல் தொழில் நுட்பத்தை பயன் படுத்துகின்றோம். இதன் உச்சக் கட்டமாக இணையத்தை பயன் படுத்துவதைக் கூறலாம். இன்று இணையம் தொடர்பாடலில் இருத்த பல தடைக்கற்களை தகர்த்து எறிந்து விட்டது என்று கூறினால் அது மிகையாகாது.
பொதுவாக நாம் ஏன் தொடர்பாடல் செய்ய விரும்புகின்றோம் என யோசித்துப் பார்த்துண்டா?. பின்வருவனவற்றில் ஒன்றிற்காக அல்லது பலதிற்காக அல்லது அனைத்துக்குமாக.• எமது எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றை பகிர்ந்து கொள்ள• திறமைகளை (Skills) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, புதியவற்றை அறிந்து கொள்ள• மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த• பொழுதுபோக்கு மற்றும் நேரம் கடத்த (இது பெண்களுக்கான சிறப்புத் தேவை!!!!)
பிரதானமாக இரண்டு வழிகளில் தொடர்பாடல் மனிதனால் மேற்கொள்ளப்படுகின்றது.1. ஒலி – பேச்சு, ஒலிகளைப் பயன் படுத்தல்2. காட்சி – படங்கள், குறியீடுகள், நிறங்கள்
தொடர்பாடலுக்கு தேவையான முக்கிய விடயதானங்கள்1. அனுப்புனர்2. ஊடகம்3. பெறுனர்
உதாரணத்திற்கு ஒரு கடிதத்தை எடுத்து கொள்ளுங்களேன். இங்கு கடிதம் எழுதுபவர் அனுப்புனர். கடிதத்தை காவிச்செல்லும் தபால் சேவை ஊடகம். கடிதத்தை பெறுவர் பெறுனர். இங்கு அனுப்புனரின் கடமை தான் அனுப்பும் செய்தி பெறுனருக்கு புரியும் வகையில் எழுதுவது. பெறுனர் அனுப்புனரின் செய்தியை புரிந்து கொள்ளாவிடின் முழு தொடர்பாடலும் பயனற்றதாகி விடுகின்றது. சில ஊடகங்கள் செய்தியை குளப்பும் தன்மைகொண்டவை உதாரணமாக சிற்றலை வரிசை ஒலிபரப்புகள் காலநிலையால் குளம்புகின்றனவே அதைக் குறிப்பிடலாம்.
தொடர்பாடலானது ஒரு திறமை என்றும் சிலர் அது ஒரு கலை பிறவியிலேயே வரவேண்டும் என்றும் கூறுவர். இது சிறிது சிக்கலான கேள்வியே!. இரண்டும் இருந்தால் தான் ஒருவர் சிறந்த தொடர்பாடல் செய்ய இயலும். உதாரணமாக பல மொழிகளை தெரிந்தவர் சிறந்த தொடர்பாடல் செய்ய கூடியவராக இருப்பார் எனக்கூற முடியாது. இதே வேளை தமிழை இரண்டாம் மொழியாகப் பயின்ற ஒருவன் தமிழிலே தமிழனை விட அழகாக தொடர்பாடல் செய்யலாம். இது ஒருவனுடைய குணவியல்பு மனோநிலமை என்பவற்றில் தங்கி இருக்கும்.
எதையும் பகுத்து பார்க்கும் திறமை உடையவர்களும் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவர்களாக இருப்பர். புதிய மொழிகளை படித்தல், உச்சரிப்புகள், நுட்பங்கள் எல்லாமே இரண்டாம் பட்சமே.
மனிதனின் தொடர்பாடலுக்கான மற்றும் தனித்து இருக்க முடியாமல் இருக்கும் தன்மைக்கு அமேரிக்க ரஸ்ய பனிப்போர் நேரத்தில் நடந்த ஒரு கதையைக் கூறினால் இங்கே தகும்.
அதாவது ஒரு ருசிய ஒற்றன் சி.ஐ.ஏ யிடன் முறையாக மாட்டிக் கொண்டான். அப்போது அவனை பல வழிகளில் கடுமையாக விசாரித்தும் அவன் வாய் திறக்க வில்லை. அப்போது அவன் யாருடனும் பேசமுடியாத இருண்ட சிறைக் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டபோது சரியாக இரண்டாவது நாளே தான் பேசத் தயார் எனக் கூறி தான் அமேரிக்கா வந்த நோக்கத்தினை சி.ஐ.ஏ அதிகாரிகளுக்கு தெளிவாகக் கூறிவிட்டான்.
இந்த உதாரணத்தில் இருந்து என்ன தெரிகின்றது மனிதன் தனித்து வாழ முடியாத ஒரு ஜந்து. தொடர்பாடல் இல்லா விட்டால் மீண்டும் மனிதன் கற்காலத்திற்கு போய்விடுவான் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அதனால காலாகாலத்திற்கு அம்மாவிற்கோ மனைவியிற்கோ யாராவது நீங்க விரும்புபவர்களிற்கு கடிதம், மின்னஞ்சல் அட்லீஸ் ஒரு காலாவது போட மறக்காதீங்க!!!!

பகுப்புகள்: பகுக்கப்படாதது