தமிழில் நுட்பம்

‘நகைச்சுவை’ பகுப்பில் உள்ள வரவுகள்

ஜீமெயில் பற்றி ஒரு பொம்மலாட்டம்

மே 26, 2007 · 4 மறுமொழிகள்

நீங்கள் ஏன் ஜீமெயிலைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஐந்து காரணங்களுடன் கூகள் களமிறங்கியுள்ளது. எப்போதும் புதுமை படைக்கும் கூகள் இம்முறை பொம்மலாட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளது. கீழே இணைக்கப்பட்ட வீடியோ கூகள் நிறுவனத்தில் பொம்மலாட்டம். பொம்மலாட்ட முடிவில் ஜீமெயில் கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள் என்று உருக்கமாக வேண்டுகின்றார்கள். ;) . இப்போது நீங்கள் ஜீமெயில் கணக்கை ஆரம்பிக்க முன்னர் போன்று யாராவது வரவேற்பு அனுப்பத் தேவையில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

எரிதங்களைத் தடுத்துவிடுகின்றது, இலகுவாக உங்களை ஒழுங்கமைக்க உதவுகின்றது, உள்ளமைந்த உரையாடல் வசதி உங்கள் காதலுக்கு தீனி போடுகின்றது போன்ற காரணங்களைக் காட்டுகின்றார்கள். சரி சரி.. என் அலம்பலைக் கேட்காமல் நேரே வீடியோவைப் பாருங்கள்..!! :)

பகுப்புகள்: இணையம் · கணனி · செய்திகள் · நகைச்சுவை

58 : சாப்ட்வேர் இன்ஜினீயரின் கதறல்

ஜனவரி 23, 2007 · 14 மறுமொழிகள்

சி கோடு எழுதத் தெரிந்த எனக்கு
உன் மனக் கோடு புரியவில்லையே!
சீ நான் ஒரு முட்டாள்
SQL Query எழுதிய மரமண்டைக்கு
வெறும் காதல் தியறி விளங்கவில்லையே!
UML கீறிய நேரத்தில்
உனக்கு கம்மல் கொடுத்திட எனக்கு தோன்றவில்லையே!
மல்டி நஷனல் கம்பனி தேடி அலைந்தேன்
ஏன் தெரியுமோ?
உனக்கு மல்டிக் கலரி்ல் புடவை வாங்கத்தான்!
உன் மனமோ Wikipedia
அதில் எழுத ஓடோடி வந்தேன்
யாரவன் மாற்றினான் அதை Encarta வாக
அழிந்து போக அந்த பில்கேட்சு
நீ என்னை வெறுக்கின்றாயா?
பரவாயில்லை
உன்னுள் ஒரு நாள் Application ஆக இல்லாவிட்டாலும்
Love Bug ஆகவாவது வருவேன்!
அது வரை Trojan Horse ஆக
உன்னைக் கண்காணிப்பேன்!
எது இருந்தென்ன!
உன் Data Base ல்
நான் இல்லையே….
ம்… உன் Hard disk ல் இடமில்லாவிட்டால்
RAM ல் ஒரு தடவை இடம் தரமாட்டாயா?

பகுப்புகள்: நகைச்சுவை

36 : Engineer இல்லாத உலகம்

அக்டோபர் 24, 2006 · 3 மறுமொழிகள்

கீழே இருக்கும் படங்களைப் பாருங்கள். பொறியியளாளர்கள் இல்லாவிட்டால் இந்த உலகு எப்படி இருந்திருக்கும் என்று கீறியுள்ளார்கள். இது சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும்தான்!!!

பகுப்புகள்: நகைச்சுவை