Entries categorized as 'செய்திகள்'
பிபிசி தொலைக்காட்சியின் கிளிக் எனும் நிகழ்சியை நடத்துபவர்கள் பேஸ்புக்கில் ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலி வெளிப்பார்வைக்கு ஒரு விளையாட்டுப்போல தெரிந்தாலும் பின்ண்ணியில் பயனர்களின் பெயர், முகவரி, மின்னஞ்சல் என்பவற்றை திருடுவதாக அமைந்திருந்தது.
இது பற்றிய நிகழ்ச்சியை காண்க.
Categories: இணையம் · செய்திகள் · துணுக்குகள்
குறிச்சொல்லிடப்பட்டது: அடையாளத் திருட்டு, தமிழ், பிபிசி, பேஸ்புக், Facebook, Tamil


ஃபயர்பொக்ஸ் 3 பீட்டா 4 வெளியாகியுள்ளது. இதில் மேலும் 900 மாற்றங்களைச் செய்துள்ளார்களாம். இதைவிட இயங்குதளம் சார்ந்த மாற்றங்களும் இயற்படுத்தப்பட்டுள்ளனவாம்.
இதேவேளை ஃபயர்பொக்ஸ் மெல்ல மெல்ல மைக்ரோசாப்ட் அண்ணாச்சியின் IE யைவிழுங்கிவருகின்றார். உலகில் இப்போது 17 வீதமானோர் Firefox பாவிக்கின்றனர். 75 வீதமானோர் IE பாவிக்கின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. கடந்தாண்டு IE பாவிப்போர் 79 வீதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Categories: இணையம் · செய்திகள் · பயர்போக்ஸ்
குறிச்சொல்லிடப்பட்டது: கணனி, தமிழ், Firefox, firefox 3, Firefox 3 beta 4, Firefox beta, IE, Tamil
பிரபலமான இணையம் சார் விற்பனையாளரான ebay தனது வலைப்பதிவிற்கு வேர்ட்பிரஸ் பாவிக்கத் தொடங்கியுள்ளது. வேர்பிரஸ் இரசிகர்களான நமக்கு இது நல்ல சேதிதானே???
Categories: இணையம் · செய்திகள் · துணுக்குகள் · வேர்ட்பிரஸ்
குறிச்சொல்லிடப்பட்டது: வேர்ட்பிரஸ், ebay
அமெரிக்க இராணுவத் தளங்களை கூகிள் ம்ப்ஸ் படமாக்குவதற்கு பென்டகன் தடை விதித்துள்ளது. இதுபற்றி கூகிள் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில் பென்டகன் குறிப்பிட்ட பிரதேசத்தின் படிமங்கள் தமது தரவுத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பென்டகன் கூகிள் குளப்பம் பற்றிய பிபிசி செய்தி
Categories: இணையம் · கணனி · கூகுள் · செய்திகள் · செய்திகள்
குறிச்சொல்லிடப்பட்டது: கணனி, கூகிள், தமிழ், Google Maps, Tamil
மைக்ரோசாப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 அறிமுகமாகியுள்ளது. Facebook, Ebay போன்ற தளங்களுடன் இது சிறப்பாக செயற்படம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
We can now find out what other features IE8 has to offer, since the beta is now publicly available for download. To get IE8, you can download it from here: http://www.microsoft.com/windows/products/winfamily/ie/ie8/readiness/Install.htm.
தகவல் உதவி : Read and write web
Categories: கணனி · செய்திகள் · மைக்ராசாப்ட்
குறிச்சொல்லிடப்பட்டது: பதிவிறக்கம், Download, IE, Internet Explorer 8
ஒரு தளத்தைப் பற்றி அறிய அந்த தளத்திற்கு நீங்கள் செல்வது இயல்பு. ஆனால் அந்த தளத்தின் முகவரி சரியாக அறியாவிட்டால் என்ன செய்வீர்கள்??
நீங்கள் செய்ய வேண்டியது கூகுள் தளத்திற்குச் சென்று அங்கே நீங்கள் தேடும் நிறுவனத்தின் பெயரையிட்டுத் தேடுக. இவ்வாறு தேடியதும் முதல் முடிவு அனேகம் நீங்கள் தேடும் நிறுவன தள முகவரியாக இருக்கும்.
சரி இப்போ அந்த நிறுவன தளத்தினுள் ஒரு தேடல் போட விரும்புகின்றீர்கள் ஆனால் அந்த தளத்திற்கு சென்று தேட விரும்மவல்லையா? கூகிளிலேயே தேட விருப்பமா? அதற்கு இப்போ கூகிள் வழிசமைத்துள்ளது.

கூகிள் தேடலின் புதிய விபரங்களை அறிய செல்லுங்கள்.
Categories: இணையம் · கணனி · கூகுள் · செய்திகள்
குறிச்சொல்லிடப்பட்டது: கூகிள், தமிழ், தேடல், Google Search, Tamil


கஸ்பர்ஸ்கை நிறுவனம் அப்பிள் கணனிகளுக்கு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளின் தேவையை உணர்ந்து தாம் சில நாட்களல் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை வெளியிட உள்ளதாக அறிவித்ததுள்ளது.
இதன் பின்னால் என்ன காரணம் உள்ளதென்று மக் பயனர்கள் சிரிக்கின்றார்கள். இதுவரை Symantec மற்றும் McAfee ஆகிய நிறுவனங்கள் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை மக் கணனிகளுக்கு வெளியிடுகின்றன. இதனால்தான் Kaspersky ம் இந்த முயற்சியில் இறங்குகின்றது.
மக் பாவிப்பவர்கள்தான் உண்மையைச் சொல்ல வேண்டும்.
Categories: கணனி · செய்திகள் · துணுக்குகள்
குறிச்சொல்லிடப்பட்டது: தமிழ், மக், வைரஸ், Mac, Tamil, Virus
இணையம் அறிமுகமான காலத்தில் இருந்த யாவரும் பாவித்த இணைய உலாவியே நெட்ஸ்கேப் இணைய உலாவி. பிற்காலத்தில் மைக்ரோசாப்ட் அண்ணணோடு சின்ன சல சலப்பு வந்துவிடவே மைக்ரேசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோறரை அறிமுகப் படுத்தி நெட்கேப்பின் வீழ்ச்சிக்கு வழி சமைத்தார். 1990 களில் இணையம் அறிமுகமான காலப்பகுதியில் கிட்டத்தட்ட 90 வீதமான இணையப் பயனர்கள் Netscape உலாவியையே பாவித்தனர்.
பிற்காலத்தில் இந்த உலாவி AOL இனால் வாங்கப்பட்டு பராமரிக்கப் பட்டு வந்தது. ஆயினும் AOL ன் பிந்திய தகவலின் படி மார்ச் 1 முதல் நெட்ஸ்கேப்புக்கான பராமரிப்பு உதவிகள் நிறுத்தப் படுவதாக அறிவித்துள்ளது. அத்துடன் இனிமேல் புதிய பதிப்புகள் வராது என்றும் அறிவித்துள்ளது. தனது பயனர்களை Firefox அல்லத்து Flock பாவக்குமாறும் வேண்டியுள்ளது.
நெட்கேப் பயனர்கள் யாவரும் புதிய உலாவிக்கு மாறுவதில் விருப்பமில்லாமலே இருக்கின்றார்கள். உதாரணத்திற்கு நெட்ஸ்கேப்பின் வலைப்பதிவில் உள்ளி சில மறு மொழிகளைப் பாருங்கள்.
“I’m sad. Flock still needs improvement and I am not happy with Firefox’s interface. I’m [an] orphan!” read one post on the Netscape blog.
“Netscape is a wonderful browser, and it will be so in the future,” read one.
சிலர் மீண்டும் நெட்ஸ்கேப் வரும் என்றும் இந்த வலைப்பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Categories: இணையம் · கணனி · செய்திகள் · மைக்ராசாப்ட்
குறிச்சொல்லிடப்பட்டது: தமிழ், நெட்ஸ்கேப், Netscape, Tamil
70 நாடுகளில் வின்டோஸ் விஸ்டாவின் விலையைக் குறைக்க மைக்ரோசாப்ட் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கான சரியான திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
இந்த முயற்சி மூலம் விஸ்டா பயனர்களை அதிகரிக்க முயல்வதாக மைக்ரோசாபட் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் விஸ்டாவின் விலை 399$ இலிருந்து 319$ ஆகக் குறைக்கப்பட உள்ளது.
இதுவரை 100 மில்லியன் அங்கீகரிக்கப்பட்ட விஸ்டா பாவனையாளர்கள் உலகம் முழுவதும் உள்ளமையை இங்கே குறிப்பிடவேண்டும்.
Categories: கணனி · செய்திகள் · மைக்ராசாப்ட்
குறிச்சொல்லிடப்பட்டது: தமிழ், மைக்ரோசாப்ட், விஸ்டா, Tamil
யாகூ தூதூவனின் Emoticons இப்போது ஒலியையும் வெளிப்படுத்தும் தன்மையுள்ளது என்பதை அறிவீர்களா? (
- இது ஒரு பேய்ச் சிரிப்பை உதிர்க்கும்)
To try out the new emoticon audibles, click the audibles icon (the one with the lips on it) above the text box in your IM window (Yahoo! Messenger 8.1 or 9.0 only). Click the More Audibles button on the right, then “See All Audibles”. Then select “Emoticons” from the list.
யாகூ தூதுவன் வலைப்பதிவில் மேலதிக விபரங்களைக் காணுங்கள்
Categories: இணையம் · உதவித் துளி · செய்திகள் · யாகூ
குறிச்சொல்லிடப்பட்டது: தமிழ், யாகூ, யாகூ தூதுவன், Tamil, Yahoo Messenger