பிபிசி தொலைக்காட்சியின் கிளிக் எனும் நிகழ்சியை நடத்துபவர்கள் பேஸ்புக்கில் ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலி வெளிப்பார்வைக்கு ஒரு விளையாட்டுப்போல தெரிந்தாலும் பின்ண்ணியில் பயனர்களின் பெயர், முகவரி, மின்னஞ்சல் என்பவற்றை திருடுவதாக அமைந்திருந்தது.
LOTR திரைப்படத்தைப் பார்த்து அதில் நீங்கள் லயித்திருக்கலாம். இப்போது அந்த கருவை மையமாக்க் கொண்டு புதிய வீடியோ ஒன்றை யாகூ வெளியிட்டுள்ளது. அதைப் பார்த்து மகிழ்க!
ஃபயர்பொக்ஸ் 3 பீட்டா 4 வெளியாகியுள்ளது. இதில் மேலும் 900 மாற்றங்களைச் செய்துள்ளார்களாம். இதைவிட இயங்குதளம் சார்ந்த மாற்றங்களும் இயற்படுத்தப்பட்டுள்ளனவாம்.
இதேவேளை ஃபயர்பொக்ஸ் மெல்ல மெல்ல மைக்ரோசாப்ட் அண்ணாச்சியின் IE யைவிழுங்கிவருகின்றார். உலகில் இப்போது 17 வீதமானோர் Firefox பாவிக்கின்றனர். 75 வீதமானோர் IE பாவிக்கின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. கடந்தாண்டு IE பாவிப்போர் 79 வீதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் தொடக்கம், அமெரிக்கா வரையும் வலைப்பதிவுகள் பெருமளவில் செல்வாக்கு செலுத்துகின்றன. கார்டியன் அண்மையில் உலகின் பிரபலமான 50 வலைப்பதிவுகளை வெளியிட்டுள்ளது.