![]()

ஃபயர்பொக்ஸ் 3 பீட்டா 4 வெளியாகியுள்ளது. இதில் மேலும் 900 மாற்றங்களைச் செய்துள்ளார்களாம். இதைவிட இயங்குதளம் சார்ந்த மாற்றங்களும் இயற்படுத்தப்பட்டுள்ளனவாம்.
இதேவேளை ஃபயர்பொக்ஸ் மெல்ல மெல்ல மைக்ரோசாப்ட் அண்ணாச்சியின் IE யைவிழுங்கிவருகின்றார். உலகில் இப்போது 17 வீதமானோர் Firefox பாவிக்கின்றனர். 75 வீதமானோர் IE பாவிக்கின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. கடந்தாண்டு IE பாவிப்போர் 79 வீதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

3 பதில்கள் இது வரை ↓
பொன்வண்டு // மார்ச் 11, 2008 இல் 12:01 பிற்பகல் |
இந்த வெர்சனில் ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளன. ஜிமெயில் தானாக ரெப்ரெஷ் ஆகவில்லை. ஜிமெயில் சாட் வேலைசெய்யவில்லை. யாஹூ மெயிலின் பீட்டா வெர்சன் வேலை செய்யவில்லை (பீட்டா 3யிலும் இந்த பிரச்சினை உள்ளது. ஆனால் நீங்கள் பாவிப்பதாகச் சொன்னீர்கள். எப்படி எனத் தெரியவில்லை. எனக்குத் தெளிவாக பிழைச் செய்தி வருகிறது. இந்த உலாவி சப்போர்ட் செய்யப்பட மாட்டாது என்று).
குறிப்பாக தமிழ்விசை, க்ரீஸ்மங்கி போன்ற தேவையான துணை மென்பெருள்கள் எதுவும் சப்போர்ட் கிடையாது. நான் வேகவேகமாக 4க்கு மாறி இப்போது திரும்பவும் பீட்டா3 க்கு மாறிவிட்டேன். யாஹூ பீட்டா மெயில் வேலை செய்யவில்லையென்றாலும் தெளிவான தமிழ் எழுத்துக்களுக்காக.
mayooresan // மார்ச் 11, 2008 இல் 1:02 பிற்பகல் |
@பொன்வண்டு
நீங்க சொல்வது சரிதான்! என் நண்பனுக்கும் வேலைசெய்யவில்லையாம்!!!
ஆனால் என் கணனியில் வேலை செய்கிறதே? தெரிவுகள் ஏதும் உள்ளதா தெரியவில்லை
Firefox 3 betaவை யாகூ மின்னஞ்சல் ஆதரிக்கின்றது « தமிழில் நுட்பம் // மார்ச் 15, 2008 இல் 6:24 மு.பகல் |
[...] 15, 2008 · No Comments Firefox 3 beta 3, 4 இல் யாகூ மின்னஞ்சல் வேலைசெய்… என்று பலர் முன்பு குறை [...]