தமிழில் நுட்பம்

நகர்பேசி உலகிலும் தடம் ஊன்றும் மைக்ராசாப்ட்

மார்ச் 4, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

நகர்பேசி உலகிலும் மைக்ரோசாப்ட் தனது தடத்தைப் பதிப்பதற்கு முயன்று வருகின்றது. இதன்படி அண்மையில் நொக்கியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி Silverlight எனும் தொழில் நுட்பத்தை நொக்கியா நகர்பேசிகளில் பயன்படுத்த உள்ளது.

Silverlight எனும் நுட்பம் அடோப் நிறுவனத்தின் Flash க்கு போட்டித் தயாரிப்பாகும். ஏற்கனவே இந்த Silverlight Platform தொழில்நுட்பத்தை யூடியூப் பாவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்டமாக நொக்கியாவின் சிம்பியன் இயங்குதளங்கள் உள்ள நகர்பேசிகளிலேயே இந்த தொழில்நுட்பம் பாவிக்கப்பட உள்ளது. நொக்கியாவின் S60, எனும் platformமே Silverlight தொழில்நுட்பத்தைத் தாங்கும் முதலாவது சிம்பியன் இயங்குதளம் உள்ள நகர்பேசியாகப் போகின்றது.  இந்த S60 முறை N96 பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Silvrlight மூலம் இணையம் சார் செயலிகளை உருவாக்க முடியும். இந்த செயலிகள் இணைய உலாவியின் உதவியின்றி செயற்படக் கூடியன.

Adope ஐ மைக்ரோசாப்ட் வெல்லுமா அல்லது புஷ் என மறைந்து போய்விடுகின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பகுப்புகள்: செய்திகள் · நகர்பேசி · நுட்பம் · மைக்ராசாப்ட்
குறிச்சொல்லிடப்பட்டது: , , , ,

0 responses so far ↓

  • There are no comments yet...Kick things off by filling out the form below.

கருத்துத் தெரிவிக்கவும்