தமிழில் நுட்பம்

MyBlogLog புதிய வடிவில்

பெப்ரவரி 29, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

 

mybloglog ஐ யாகூ வாங்கியது அறிந்ததே. இப்போது மைப்ளாக்லாக்கில் பல இணைய சேவை வழங்கிகளின் செய்தி ஓடைகளை வாசித்து அதை உங்கள் தளத்தில் காட்டும் வசதி கொண்டமைந்துள்ளது. ஒருவர் உங்கள் சுயவிபரப் பக்கத்திற்குச் சென்றால் டுவிட்டரில் என்ன போட்டீர்கள், யூடியூப்பில் என்ன போட்டீர்கள், என்ன வலைப்பதிவு எழுதினீர்கள் என்று காட்டம். கிட்டத்தட்ட ஒரு இணைய வரலாற்றுப் பதிவாக இருக்கும்.

 என் சுய விபரப் பக்கத்தை இங்கே காணலாம். விரும்பினால் நண்பராகப் பதிந்து கொள்ளுங்கள்.

இதே போன்ற சேவை ஒன்றை friendfeed எனும் தளமும் வழங்கி வருகின்றது. யாகூ கால் வைப்பதனால் விரைவில் மேலும் பலரையும் இவ்வகையான தளத்தில் காணலாம். இந்த தளத்தில் என் சுயவிபரப் பக்கம்.

ஒரு தளத்தை வைத்திருப்பவர் அவருடைய வாசகர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ற பதிவுகள் எழுத இது வழிவகுக்கும்.

பகுப்புகள்: இணையம் · கணனி · செய்திகள் · யாகூ
குறிச்சொல்லிடப்பட்டது: ,

0 responses so far ↓

  • There are no comments yet...Kick things off by filling out the form below.

கருத்துத் தெரிவிக்கவும்