தமிழில் நுட்பம்

ஆர்கூட் தமிழில்

செப்டம்பர் 14, 2007 · 10 மறுமொழிகள்

இன்று ரவியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ஆர்கூட்டுக்கு தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி இருந்தது…!!!

ஜிமெயிலுக்கே இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாத நிலையில் எவ்வாறு ஆர்கூட்டுக்கு வழங்கினார்கள் என்று சென்று பார்த்தேன்… அட சத்தியமாத்தாங்க.. தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளது!!!!

Settings -> Display Lanugauge: தமிழ் என்பதைத் தெரிவு செய்தால் சரி. தமிழ் இடைமுகம் கிடைத்துவிடும்.

மொழிபெயர்பில் சில குறைகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆயினும் கூகுளுக்கு இந்தளவில் மனம் வந்ததே பெரிய விடயம்.

இது பற்றிய மேலதிக உரையாடல்களை கூகளின் இந்திய மொழிகளுக்கான குழுமத்தில் உரையாடலாம்!!!

திரைக்காட்சியைக் காண்க

பகுப்புகள்: இணையம் · கணனி · செய்திகள் · தமிழ்

10 பதில்கள் so far ↓

கருத்துத் தெரிவிக்கவும்