Facebook இடைமுகம் மாற்றம்

இப்போது Facebook புதிய இடைமுகத்தை வழங்குகின்றது. http://new.facebook.com என்ற முகவரியில் புதிய இடைமுகத்தை பார்க்கலாம். பயனர் சுயவிபரப் பக்கம் முன்பு போல் இல்லாமல் எளிமையாக இருக்கின்றது. அப்லிகேஷன்கள் தனியான ஒரு தத்தலில் போடப்பட்டுள்ளது.

கூகிள் டாக்ஸ் வார்ப்புரு

இப்போது கூகிள் டாக்ஸ் வார்ப்புருக்கள் வழங்குகின்றது. உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் ஒரு திருமணமா? அதற்கு ஒரு ஸ்லைட் ஷோ வார்ப்புரு இருக்கின்றது. அதை உங்களுக்கேற்றவாறு மாற்றிப் பயன்படுத்தலாம்.

இதைவிட பல்வேறு ஸ்பிட்ஷீட் வார்ப்புருக்களும் உள்ளன.

கூகிள் டாக்ஸின் புதிய வார்ப்புருக்கள் கலக்கல் தமிழ் இடைமுகத்துடன் கிடைப்பது மேலும் அருமை. காண்க.

கூகிள் செய்திகள் தமிழில்

இப்போது கூகிள் தமிழ் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு கிடைத்த சேவை இப்போது தமிழுக்கும் கிடைப்பது மகிழ்ச்சி.

கூகிள் செய்திகள் வலைப்பதிவு இது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. அத்துடன் பல்வேறு முறையில் அமைந்த வலைத்தளங்களில் இருந்து செய்திகளைப் பெற்று அதை ஒருங்குறிக்கு மாற்றித்தருவது பிரைச்சனையாக இருந்த்தாகவும் ஆயினும் ஹிந்தி மொழி செய்திகளை அறிமுகப்படுத்தும் போது இதே போன்ற பிரைச்சனை இருந்ததால் இதை எளிதாக எதிர் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Zemanta Pixie

தானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி

கூகிள் தேடல் பொறியில் தமிழ் இடைமுகத்தில் இருக்கும் போது, நீங்கள் ‘த’ என்று தட்டச்சிட, த வில் தொடங்ககூடிய தேடலுக்கான சொற்களைக்காட்டுகின்றது.

இதைவிட ஆங்கிலத்தில் தட்டச்சிட்டாலும் தமிழில் சொற்களைப் பரிந்துரைக்கின்றது.
தமிழில் பரிந்துரைக்கும் கூகிள்

கூகிள் இந்தியா தளத்தில் மட்டுமே இது வேலைசெய்கின்றது. இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் இடைமுகம் பாவித்தாலும் இவை பயனளிக்காது.

இப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல

mayu एक अच्छा लड़का है , मैं गाने और नृत्य कर सकते हैं . एक दिन मैं आपको एक प्रसिद्ध सितारे 50 सेंट की तरह ही है .

எப்படி?? ஹி.. ஹி.. சரி சரி விசயத்தை சொல்லிவிடுகின்றேன்.

கூகிள் இப்போது ஹிந்தி -> ஆங்கிலம், ஆங்கிலம் -> ஹிந்தி மொழிமாற்றியை வெளியிட்டுள்ளது. அதனால் இனி நீங்கள் ஹிந்தி தளங்களையும் மொழிமாற்றிப் பார்க்கலாம்.

Facebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு

பிபிசி தொலைக்காட்சியின் கிளிக் எனும் நிகழ்சியை நடத்துபவர்கள் பேஸ்புக்கில் ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலி வெளிப்பார்வைக்கு ஒரு விளையாட்டுப்போல தெரிந்தாலும் பின்ண்ணியில் பயனர்களின் பெயர், முகவரி, மின்னஞ்சல் என்பவற்றை திருடுவதாக அமைந்திருந்தது.

இது பற்றிய நிகழ்ச்சியை காண்க.

உலகின் சிறந்த 100 இணைய செயலிகள்

The 100 top Web apps for 2008

இணையத்தின் சிறந்த 100 செயலிகளின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

யாகூவின் Lord of The Rings

LOTR திரைப்படத்தைப் பார்த்து அதில் நீங்கள் லயித்திருக்கலாம். இப்போது அந்த கருவை மையமாக்க் கொண்டு புதிய வீடியோ ஒன்றை யாகூ வெளியிட்டுள்ளது. அதைப் பார்த்து மகிழ்க!

The friend List of the Ring

Pirates crack Vista SP1 copy protection

Windows VistaImage via Wikipedia

வின்டோஸ் விஸ்டாவிற்கான சேவை பொதி 1 ஐ இலகுவில் மற்றவர்களால் உடைக்க முடியாது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்த்து. ஆனாலும் pirates அதை உடைத்து மைக்ரோசாப்ட் மூஞ்சியில் கரியைப் பூசியுள்ளனர்.

The release comes from the well known scene group BIE. They have a long history of cracking MS programs and BIE cracks are famous for displaying message ‘please wait patiently while BIE cracks Billy’s ass’ during cracking process. The group has released a pirated version of Vista which has Service Pack 1 integrated.

Related articles

facebook அறிமுகம்

உலகம் முழுவதும் காட்டுத்தீபொல பரவிவரும் இந்த சமூக வலைப்பின்னல் தளத்திற்கான ஒரு அறிமுகம்.